பிரான்ஸ் நாட்டுக்கு சுற்றுலா சென்றிருந்த பிரித்தானியர் ஒருவர், பனிச்சறுக்கு விளையாடும்போது பனிப்பாறைச்சரிவில் சிக்கி பலியானார்.
பிரெஞ்சு ஆல்ப்ஸ் மலையில் பனிச்சறுக்கு விளையாடச் சென்ற தனது 50 வயதுகளிலிருக்கும் பிரித்தானியர் ஒருவர் பனிப்பாறைச்சரிவில் சிக்கினார். நேற்று ஞாயிற்றுக்கிழமை மதியம் அவரைத் தேடி மருத்துவ உதவிக்குழுவினர் உட்பட மீட்புக்குழுவினர் சுமார் 50 பேர் சென்ற நிலையில், 50 நிமிட தேடலுக்குப் பின், பனியில் 2.5 மீற்றர் ஆழத்தில் புதையுண்டிருந்த அவரது உயிரற்ற உடலையே அவர்களால் மீட்கமுடிந்துள்ளது.

