முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எதிரான வழக்கை அடுத்தமாதம் 13ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு அழைக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (12) உத்தரவிட்டுள்ளது.
கெஹெலிய பதவியில் இருந்த காலத்தில் தனிப்பட்ட ஊழியர் குழாமில் வெளி நபர்களின் பெயர்களைச் சேர்த்து அவர்களது சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளைத் தனது வங்கிக் கணக்குகளில் வரவு வைத்த குற்றச்சாட்டுகளின் கீழ் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இவர்களுக்கு எதிராக ஏற்கனவே குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதுடன் அவர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது

