கந்தளாயில் பலத்த காற்று: மரக்கிளை முறிந்து விழுந்ததில் இரு முச்சக்கரவண்டிகள் சேதம்

21 0

திருகோணமலை கந்தளாய் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (11) வீசிய பலத்த காற்றின் காரணமாக கந்தளாய் வைத்தியசாலையின் வாகன தரிப்பிடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களின் மீது அருகில் இருந்த மரத்தின் கிளை முறிந்து விழுந்ததில் இரண்டு முச்சக்கர வண்டிகள் சேதமடைந்துள்ளதாக கந்தளாய் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

குறித்த முச்சக்கர வண்டியில் வந்தவர்கள் நோயாளிகளை பார்க்கச் சென்றிருந்ததால் எவருக்கும் பாதிப்பு இல்லை எனவும், குறித்த இடத்தில் பல வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தபோதும் இரு முச்சக்கரவண்டிகள் மாத்திரம் சேதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.