அம்பாறை மாவட்டம் பாணமை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புறநகர் பகுதியில் உள்ள வீடொன்றை பழுது பார்க்கும் போது ஓடுகளின் கீழ் மறைத்து வைக்கப்பட்டிருந்த 118 வகையான தோட்டாக்கள் (5.56x 45mm) பாணமை பொலிஸ் சனிக்கிழமை (10) நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
குறித்த வீட்டின் உரிமையாளர் தற்போது கொழும்பில் வசிக்கும் நிலையில் வீட்டினை பழுது பார்க்கும் பணியை தனது சகோதரரிடம் ஒப்படைத்திருந்தார்.
குறித்த சம்பவம் தொடர்பில் பாணமை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் மேற்பார்வையில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

