“இனவிடுதலைக்காக உறவுகளுடன் சந்திப்பு ”
10.01.2026 சனிக்கிழமை யேர்மனிய நாட்டின் பிராங்பேர்ட் (Frankfurt) நகரில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினரின் அரசியற் கலந்துரையாடற் கூட்டம் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
த.தே.ம.முன்னணியின் பொதுச்செயலாளர் திரு. செ.கஜேந்திரன், பரப்புரைச் செயலாளர் திரு.ந.காண்டீபன், கட்சியின் பேச்சாளர் திரு.கடந்த.சுகாஷ், தேசிய அமைப்பாளர் திரு.த.சுரேஸ் மற்றும் கட்சியின் மத்தியகுழு உறுப்பினர் திரு.தீபன் திலீசன் ஆகியோரது முதலில் தாயகத்தின் தற்போதைய அரசியல் நிலைவரம் குறித்து உரையாற்றினார்கள்.
தொடர்ந்து வருகை தந்திருந்து மக்களுக்கான கேள்வி நேரத்தில் பல்வேறுபட்ட கேள்விகளுக்கு மிகவும் தெளிவாக விளக்கமளிக்கப்பட்டது. நிறைவாக தாயக மக்களும் புலம்பெயர்ந்து வாழும் மக்களும் எவ்வாறு இணைந்து பல்வேறு அரசியல் முன்னெடுப்புகளை மேற்கொள்ளலாம் எனவும் கலந்துரையாடப்பட்டு நிகழ்வு நிறைவடைந்தது.

















