சுவிட்சர்லாந்தையே உலுக்கிய மதுபான விடுதி தீவிபத்து வழக்கில், விடுதியின் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.சுவிட்சர்லாந்தின் Valais மாகாணத்திலுள்ள Crans-Montana என்னுமிடத்தில் அமைந்துள்ள பனிச்சறுக்கு ரிசார்ட்டின் Le Constellation என்னும் மதுபான விடுதியில் புத்தாண்டு தினத்தன்று நிகழ்ந்த தீவிபத்தில் 40 பேர் பலியானார்கள், நூற்றுக்கும் அதிகமானோர் காயமடைந்தார்கள்.

இந்நிலையில், அந்த மதுபான விடுதியின் உரிமையாளரான Jacques Moretti கைது செய்யப்பட்டுள்ளார்.
மதுபான விடுதியின் இணை உரிமையாளரும், Jacques Morettiயின் மனைவியுமான Jessica Moretti வீட்டுச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

