பிரான்சில் G7 உச்சி மாநாடு நடைபெற உள்ள நிலையில், மாநாடு நடைபெறும் திகதியை பிரான்ஸ் அரசு மாற்றியுள்ளது.
பிரான்சிலுள்ள Évian-les-Bains என்னுமிடத்தில், 52ஆவது G7 உச்சி மாநாடு நடைபெற உள்ளது.
ஜூன் மாதம் 14ஆம் திகதி முதல் 16ஆம் திகதி வரை மாநாடு நடைபெற இருந்த நிலையில், தற்போது மாநாடு, ஜூன் மாதம் 15ஆம் திகதிக்கு மாற்றப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்த திகதி மாற்றத்தின் பின்னணியில் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் இருப்பதாக கூறப்படுகிறது.
அதாவது, ஜூன் மாதம் 14ஆம் திகதி ட்ரம்பின் 80ஆவது பிறந்தநாள் ஆகும். தனது பிறந்தநாளை முன்னிட்டு, ஜூன் மாதம் 14ஆம் திகதி, வெள்ளை மாளிகையில் ஒரு mixed martial arts போட்டியை நடத்த திட்டமிட்டுள்ளாராம் ட்ரம்ப்.
இந்நிலையில், பிரான்ஸ் ஜனாதிபதி அலுவலகம், அனைத்து G7 கூட்டாளர்களுடனும் கலந்தாலோசித்ததின் விளைவாக மாநாடு நடத்தப்படும் திகதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
ஆனால், G7 மாநாட்டில் ட்ரம்ப் கலந்துகொள்வது அத்தியாவசியமானது என நமது கூட்டாளர்கள் நம்புவதாகவும், அதனாலேயே அவரது வசதிக்கேற்ப மாநாடு நடத்தப்படும் திகதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் மூத்த அமெரிக்க அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

