பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் இணையதளம் தற்காலிகமாக முடக்கம்!

26 0

பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகார அமைச்சின் இணையதளத்தை அணுகுவது தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

குறித்த இணையதளம் தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளதாகவும், ஏதேனும் விசாரணைகள் இருந்தால், இணையத்தயத்திற்குள் குறிப்பிடப்பட்டுள்ள தொலைபேசி இலக்கம் அல்லது மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

இணையதளத்தைப் புதுப்பிக்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றமையே இதற்கான காரணமென பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகார அமைச்சு தெரிவித்துள்ளது.