வாக்காளர் இடாப்பில் பெயர் உள்ளடக்கப்பட்ட பின்னர் தேர்தல்களில் வாக்களிக்காதவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட வேண்டும் என்று புதிய ஜனநாயக முன்னணி பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க பாராளுமன்றத்தில் தனிநபர் பிரேரணையொன்றை கொண்டுவந்துள்ளார்.
ரவி கருணாநாயக்கவினால் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ள தனிநபர் பிரேரணையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
வாக்குரிமையை இழந்த பதிவுசெய்யப்பட்ட வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகமாகக் காணப்படுவதனால், பதினெட்டு வயதுக்கு மேற்பட்ட ஒவ்வொரு தனிநபரும் வாக்களிப்பதற்கு அனுமதிக்கப்படல் வேண்டும்.
தேர்தல் இடாப்பில் பெயர் பெயர் உள்ளடக்கப்பட்டதன் பின்னரும் வாக்களிக்காத நபருக்கு அபராதம் விதிக்கப்பட வேண்டும்.இம்முறையானது அதிக பங்கேற்புமிக்க ஜனநாயகச் ஜனநாயகச் செயன்முறையை இப்பாராளுமன்றம் பிரேரிக்கின்றது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

