யாழ்ப்பாணம், நல்லூர் பகுதிகளில் விசேட அதிரடிப் படையினர் நடத்திய சோதனை நடவடிக்கைகளின்போது 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த கைது நடவடிக்கையானது இன்றையதினம்(06.01.2026) மேற்கொள்ளப்பட்டுள்ளது.
24 தொடக்கம் 28 வயதுக்குட்பட்ட இளைஞர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.இதன்போது, கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து ஒரு வாள், 4 கையடக்கத் தொலைபேசிகள், ஒரு மோட்டார் சைக்கிள், 860 போதை மாத்திரைகள் என்பன மீட்கப்பட்டுள்ளன.மேலும், கைது செய்யப்பட்டவர்களை மேலதிக விசாரணைகளுக்குப் பின்னர் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

