திருகோணமலை- திரியாய் கிராமத்தில் வீடொன்று தீப்பற்றி எரிந்துள்ளது.
குறித்த சம்பவமானது இன்றையதினம்(06.01.2026) இடம்பெற்றுள்ளது.
மின் கோளாறு காரணமாக இந்த விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த தீ விபத்துச் சம்பவத்தை அடுத்து, குச்சவெளிப் பிரதேசச் செயலாளர், குச்சவெளிப் பொலிஸ் நிலைய அதிகாரி மற்றும் திரியாய் கிராம உத்தியோகத்தர்கள் நேரில் சென்று பார்வையிட்டு, நிலைமையை ஆய்வு செய்தனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

