மாந்தை-அடம்பன், ஆண்டாங்குளம் பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் காயமடைந்த நிலையில் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த விபத்தானது இன்று(06.012026) மாலை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
விபத்து குறித்து மேலும் தெரியவருகையில், கடைகளுக்கு விநியோகிப்பதற்காக வாழைக்குலைகளை ஏற்றி வந்த கெப் ரக வாகனம் வேகக்கட்டுப்பாட்டை இழந்த நிலையில்,மரத்துடன் மோதி பின்னர் நிறுத்தப்பட்ட மோட்டார் சைக்கிளுடன் மோதி உள்ளது.
இதன்போது குறித்த கெப் ரக வாகனத்தை செலுத்தி வந்தவர் காயமடைந்த நிலையில் மன்னார் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதன்போது, கெப் ரக வாகனம் சேதமடைந்துள்ளதோடு,மோட்டார் சைக்கிளும் சேதமடைந்துள்ளது.
மேலும், விபத்து தொடர்பில் அடம்பன் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

