கொள்ளுப்பிட்டி , மரைன் டிரைவ் கடல் பகுதியில் இருந்து சடலமொன்று திங்கட்கிழமை (04) அன்று மீட்கப்பட்டுள்ளது.
இறந்தவரின் அடையாளம் மற்றும் ஆணா அல்லது பெண்ணா என்பது இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

