ஜீப் மோதி வெளிநாட்டவர் மரணம்

27 0

வெலிகம கடற்கரையில் வீதியில் வெள்ளிக்கிழமை இரவு நடந்த விபத்தில் 42 வயதுடைய வெளிநாட்டு பிரஜை ஒருவர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

மாத்தறையில் இருந்து காலி நோக்கி பயணித்த ஜீப் வாகனம், வீதியில் நடந்து சென்று கொண்டிருந்த ஸ்லோவாக்கிய நாட்டைச் சேர்ந்த ஒருவர் மீது மோதியதில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் காயமடைந்த நபரை வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போதும்அவர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்துடன் தொடர்புடைய ஜீப் வண்டியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார். வெலிகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்