மட்டக்களப்பு நகரில் தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பரபரப்பு மிக்க கல்லடி பிரதேசத்தில் இளைஞர் ஒருவரின் சடலம் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்டுள்ளது
மட்டக்களப்பு கல்லடி ஜீவி தனியார் வைத்தியசாலைக்கு முன்னால் வௌ்ள்ளிக்கிழமை (02) காலை குறித்த சடலம் அடையாளம் காணப்பட்டதையடுத்து அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது
பல வர்த்தக நிலையங்கள் அமைந்துள்ள அப்பிரதேசத்தில் உயரமான இடம் ஒன்றில் தூக்கி தொங்கிய நிலையில் குறித்த சடலம் காணப்படுகிறது
22 வயதுடைய அக்கரைப்பற்று சமுர்த்தி வீதியைச் சேர்ந்த 22 வயதுடைய முகுந்தன் சந்தோஷ் என்ற இளைஞனுடைய சடலம் என அடையாளம் காணப்பட்டுள்ளது
குறித்த இடத்துக்கு விஜயம் மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் மற்றும் தடையவியல் சொக்கோ பொலிஸ் பிரிவினர் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு உள்ளனர் குறித்த இடத்தில் பெருமளவிலான மக்கள் கூடியதுடன் பரபரப்பும் ஏற்பட்டுள்ளது

