பெண் கிராம அலுவலரை தாக்கமுயற்சி: போராட்டம் வெடித்தது

32 0

மன்னார் நகர பிரதேச செயலாளர் பிரிவில் கடமையாற்றுகின்ற கிராம அலுவலர்கள் செவ்வாய்க்கிழமை (30) காலை 9.30 மணி முதல் அடையாள பணிப்பகிஸ்கரிப்பை மேற்கொண்ட நிலையில்   முதல் மறு அறிவித்தல் வரை சுகயீன விடுமுறை போராட்டத்தில் குதித்துள்ளனர்.

மன்னார் நகர பிரதேசச் செயலகத்தில் புதுக்குடியிருப்பு கிராம அலுவலர் தனது அரச கடமையில்  திங்கட்கிழமை(29) காலை ஈடுபட்டு கொண்டிருந்த போது பிரதேச செயலகத்திற்குள் நுழைந்த கும்பல்  குறித்த பெண் கிராம அலுவலரை தாக்க முற்பட்ட தோடு,அவரை தகாத வார்த்தைகளால் பேசி,அவரது கடமைக்கு இடையூறு ஏற்படுத்தியுள்ளனர்.

மேலும் அவர் ஒரு பெண் கிராம அலுவலர் என்பதால் அவரது கௌரவத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தி உள்ளனர்.குறித்த சம்பவத்திற்குகிராம அலுவலர்கள் மற்றும் மன்னார் நகர பிரதேச செயலக உத்தியோகத்தர்கள்கண்டித்ததோடு,  செவ்வாய்க்கிழமை(30) காலை கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்தனர்.

மன்னார் நகர பிரதேச செயலகத்திற்கு முன்னால் செவ்வாய்க்கிழமை (30) காலை 9.30 மணியளவில் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள்மற்றும் கிராம அலுவலர்கள் ஒன்று கூடி கருப்பு பட்டி அணிந்து பதாகைகளை ஏந்தியவாறு    எதிர்ப்பை தெரிவித்தனர்.

குறித்த பெண் கிராம அலுவலரை தாக்க  முற்பட்ட குறித்த  நபர்களை கைது செய்து சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்து குறித்த போராட்டத்தை முன்னெடுத்தனர்.