டென்மார்க் கொல்பேக் நகரில் உணர்வெழுச்சியுடன் நடைபெற்ற மாவீரர் நாள்.

78 0

27.11.2025 அன்று கொல்பேக் நகரில் மிகவும் உணர்வெழுச்சியுடன் 2025 ம் ஆண்டுக்கான மாவீரர் நாள் நடந்தேறியது.

கொல்பேக் நகரில் Kulturkasernen எனும் இடத்தில் நடைபெற்ற இந்நிகழ்வு முறையே பொதுச்சுடர் ஏற்றல், தமிழீழத் தேசியக்கொடி ஏற்றல், தமிழீழத் தேசியத்தலைவரின் 2008 க்கான மாவீரர்நாள் உரை காட்சிப்படுத்தல், 2025 க்கான விடுதலைப்புலிகளின் மாவீரர் நாள் அறிக்கை ஒலிபரப்பு, மற்றும் அகவணக்கம், ஈகைச்சுடர் ஏற்றல், மாவீரர் குடும்பங்களின் சுடரேற்றல், மலர் வணக்கம், பொதுமக்களின் சுடர்/மலர் வணக்கத்துடன் ஆரம்பமாகியது.

மக்களின் உணர்வுபூர்வமான பங்களிப்புடன் நடைபெற்ற இந்நிகழ்வில், தொடர்ந்து மாவீரர் கானங்கள், எழுச்சி நடனங்கள் கவிதைகள், மற்றும் சிறப்புப் பேச்சு போன்ற நிகழ்வுகள் இடம்பெற்று இறுதியாக ”நம்புங்கள் தமிழீழம்” பாடல் ஒலிக்கப்பட்டு, தேசியக்கொடி கையேந்தப்பட்டு, எமது தாரக மந்திரமான “தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்” என்ற உறுதிமொழி எடுக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்நிகழ்வானது நிறைவேற்றம் பெற்றது.