தாயகத்தில் தற்போது ஏற்பட்டிருக்கும் இயற்கைப் பேரிடரில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான அவசர உதவிகள் வழங்கும் திட்டத்தில், பெருவெள்ளம் காரணமாக இடம்பெயர்ந்து, தற்காலிக இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களுக்கான உணவு, குடிநீர், குழந்தைகளுக்கான பால்மா, பம்பஸ், பிஸ்கட், குடிநீர் மற்றும் பாய் வழங்கும் வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
முல்லைத்தீவு கல்விளான் பகுதியில் உள்ள முகாமில் தங்கியுள்ள 18 குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகளுக்கும் மக்களுக்குமான உதவியாக இன்று (30.11.2025) இன்று பால்மா, பிஸ்கட், பம்பஸ் போன்றவை வழங்கப்பட்டதோடு, அக்குடும்பங்களுக்கு உலர்உணவுப்பொருட்களும் வழங்கப்பட்டது.இந்த உதவித்திட்டமானது நோர்வே தமிழ்முரசம் வானொலின் நிதிப்பங்களிப்போடு முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.













