வவுனியா குஞ்சுக்குளம் பகுதியில் வெள்ளத்தில் சிக்கிய 3 பேரை ஹெலிக்கொப்டர் மூலம் மீட்ட விமானப்படையினர்

40 0

வவுனியா குஞ்சுக்குளம் பகுதியில்  வெள்ளப்பெருக்கில் சிக்கிய 3 பேரை இலங்கை விமானப்படையினர் ஹெலிக்கொப்டர் மூலம் மீட்டுள்ளனர்.

இன்று (30) காலை வவுனியா  குஞ்சுக்குளம் பகுதியில் மீட்புப் பணிகளுக்காக விமானப்படைக்குச் சொந்தமான பெல்-212 ஹெலிக்கொப்டர் புறப்பட்டுச் சென்றது.

இதன்போது வெள்ளப்பெருக்கில் வீட்டினுள் சிக்கிய 3 நபர்களை விமானப்படை ரெஜிமென்ட் விசேட படைப்பிரிவின் மீட்புக் குழுவினர் மீட்டு  பாதுகாப்பான இடத்திற்கு  அழைத்துச் சென்றனர்.