மட்டக்களப்பு – பொலன்னறுவை பிரதான வீதியில் மனம்பிட்டிய பகுதி நீரில் மூழ்கியது ; போக்குவரத்து தடை

33 0

கடும் மழைவீழ்ச்சியினால் மட்டக்களப்பு-பொலன்னறுவை பிரதான வீதியில் மனம்பிட்டிய பகுதி நீரில் மூழ்கியுள்ளதால், போக்குவரத்து முற்றிலுமாக தடைப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்நிலையில், வடமத்திய மாகாணத்தில் பல வீதிகள் நீரில் மூழ்கியுள்ளதால், வாகனப் போக்குவரத்து தடைபட்டுள்ளது.

பொலன்னறுவை – மதுரு ஓயா வீதி (மானம்பிட்டிய பிரதேசத்திலிருந்து)

பொலன்னறுவை – சோமாவதிய வீதி (சுங்காவில பிரதேசத்திலிருந்து)ஓயாமடுவ – செட்டிகுளம் வீதி (முற்றிலும் நீரில் மூழ்கியுள்ளது)அநுராதபுரம் – வாரியப்பொல வீதி (தெதுரு ஓயா பாலத்திற்கு அருகில் மூடப்பட்டுள்ளது)