கால்வாயில் கவிழ்ந்து டிப்பர் வாகனம் விபத்து!

23 0

பொலன்னறுவை – அரலகங்வில பிரதான வீதியில் டிப்பர் வாகனம் ஒன்று ZD கால்வாயில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்து நேற்று புதன்கிழமை (26) காலை இடம்பெற்றுள்ளது.

விபத்தில் டிப்பர் வாகனத்தின் சாரதி காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சாரதி, உணவகம் ஒன்றில் தேநீர் அருந்திவிட்டு டிப்பர் வாகனத்தை பின்நோக்கி செலுத்திய போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.