பாராளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பம்

28 0

சபாநாயகர் தலைமையில் இன்று (13) பாராளுமன்ற அமர்வு நடவடிக்கைகள் ஆரம்பமாகின.

அதன்படி, 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் இன்று ஆரம்பமாகியது.

மு.ப. 09.30 – மு.ப. 10.00 பாராளுமன்ற நிலையியற் கட்டளை 22(1) முதல் (6) வரையின் பிரகாரம் பாராளுமன்ற அலுவல்கள்.

மு.ப. 10.00 – மு.ப. 10.30 வாய்மூல விடைக்கான வினாக்கள்.

மு.ப. 10.30 – மு.ப. 11.00 பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழ் வினாக்கள்.

மு.ப. 11.00 – பி.ப. 6.00 ஒதுக்கீட்டுச் சட்டமூலம் – 2026 – இரண்டாம் மதிப்பீடு (ஒதுக்கப்பட்ட ஐந்தாவது நாள்).

பி.ப. 6.00 – பி.ப. 6.30 சபை ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை (எதிர்க்கட்சி).