தமிழ
க பால் முகவர்கள் நலச் சங்க தலைவர் பொன்னுசாமி வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
மதுரை ஆவினுக்கு வடமாநிலத்தில் இருந்து கொள்முதல் செய்யப்பட்ட ரூ.4 கோடி மதிப்புள்ள 81 டன் வெண்ணெய் கெட்டுப் போய் மிகப் பெரிய நிதியிழப்பு ஏற்பட்டுள்ளது. இதில் ஆவின் இணைய அதிகாரிகளும், மதுரை ஆவின் அதிகாரிகளும் கூட்டணி அமைத்து மோசடி நடை பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது.
எனவே, இந்த மோசடி குறித்து சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். நிதியிழப்பை ஏற்படுத்திய அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

