பிரித்தானியாவில் இலங்கையர்களுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி! நாடு கடத்த நடவடிக்கை

25 0

பிரித்தானியாவிலிருந்து இலங்கையர்கள் நாடு கடத்தப்படும் எண்ணிக்கையில் ஏற்பட்ட கடுமையான வீழ்ச்சி குறித்து பிரித்தானிய பிரபுக்கள் சபை கவலை வெளியிட்டுள்ளது.

இந்தக் குறைவுக்கு, நாடு கடத்தப்பட வேண்டிய தமது பிரஜைகளைத் திரும்பிப் பெறுவதில் இலங்கை ஒத்துழைக்கத் தவறியது முக்கிய காரணமாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

தேசியம் மற்றும் எல்லைகள் சட்டம் மீதான விவாதத்தின்போது, உள்துறை அலுவலகத்திற்கான நிழல் அமைச்சர் லோர்ட் டேவிஸ் ஒப் கோவர் பிரித்தானியாவின் இடப்பெயர்வுக் கண்காணிப்பகத்தின் தரவுகளைச் சுட்டிக்காட்டினார்.

பிரித்தானிய அரசாங்கம், விசா காலம் முடிவடைந்த, தஞ்சம் கோரிக்கை நிராகரிக்கப்பட்ட அல்லது குற்றம் சாட்டப்பட்ட வெளிநாட்டுப் பிரஜைகளை அவர்களின் சொந்த நாடுகளுக்குத் திரும்பி அனுப்புகிறது.

பிரித்தானியாவில் இலங்கையர்களுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி! நாடு கடத்த நடவடிக்கை | Britain In Struggle Bcoz Of Sri Lankans

ஆனால் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் இருந்த வீதத்துடன் ஒப்பிடுகையில், தற்போது பிரித்தானியா இலங்கைக்குத் நாடு கடத்தும் மக்களின் எண்ணிக்கை 97 சதவீதம் குறைந்துவிட்டது .

இலங்கை, பங்களாதேஷ் மற்றும் பாகிஸ்தான் போன்ற நாடுகள், திருப்பி அனுப்பப்பட வேண்டிய தமது குடிமக்களின் அடையாளத்தை உறுதி செய்வதில் ஒத்துழைக்க மறுக்கின்றன அல்லது தாமதப்படுத்துவதாக பிரித்தானியா அரசாங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.

விசா அபராதங்களை விதிக்கும் நடைமுறை

அத்தகைய நாடுகளுக்கு விசா அபராதங்களை விதிக்கும் நடைமுறையை கட்டாயமாக்க வேண்டும் என கோரும் சட்டத் திருத்தம் 71யை லோர்ட் டேவிஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.

 

ஒரு நாடு அடையாளத்தை அல்லது நிலையைச் சரிபார்க்க மறுக்கும் போதோ அல்லது தாமதப்படுத்தும் போதோ, அவர்களை வெளியேற்றுவது கிட்டத்தட்ட சாத்தியமற்றதாகிவிடும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

முன்வைக்கப்பட்ட திருத்தம், அத்தகைய சந்தர்ப்பங்களில் உள்துறைச் செயலாளர் கட்டாயம் செயல்பட வேண்டியிருப்பதை உறுதி செய்யும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.