வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சின் சிரேஷ்ட உதவிச் செயலாளர் பதவியில் தற்போது கடமையாற்றி வரும் இலங்கை நிர்வாக சேவையின் ஐ ஆம் தர அதிகாரியான தரணி குமாரதாசவை கூட்டுறவு அபிவிருத்தி ஆணையாளர் கூட்டுறவுச் சங்க பதிவாளர் பதவிக்கு நியமிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது.
2025.11.10 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எட்டப்பட்ட அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு செவ்வாய்க்கிழமை ( 11 நவம்பர் 2025) ஊடக அமைச்சில் இடம்பெற்றது.
இதன் போதே இந்த அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
கூட்டுறவு அபிவிருத்தி ஆணையாளர் கூட்டுறவுச் சங்க பதிவாளர் பதவியில் கடமையாற்றும் இலங்கை நிர்வாக சேவையின் ஐ ஆம் தர அதிகாரியான. எச்.ஏ.ஆஷா ஹப்புஆராச்சி அவர்களை அப்பதவியிலிருந்து விடுவிக்குமாறு வேண்கோள் முன்வைக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, அவரை குறித்த பதவியிலிருந்து விடுவிப்பதற்கும், அதனால் ஏற்படும் பதவி வெற்றிடத்திற்கு வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சின் சிரேஷ்ட உதவிச் செயலாளர் பதவியில் தற்போது கடமையாற்றி வரும் இலங்கை நிர்வாக சேவையின் ஐ ஆம் தர அதிகாரியான தரணி குமாரதாசவை நியமிப்பதற்கும் வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

