சுவிட்சர்லாந்தில் கருணைக்கொலை செய்யப்பட்ட 120 நாய்கள்: அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள செய்தி

21 0

சுவிஸ் மாகாணமொன்றில் 120 நாய்கள் கருணைக்கொலை செய்யப்பட்டுள்ள விடயம் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.

120 நாய்கள் கருணைக்கொலை

சுவிட்சர்லாந்தின் Solothurn மாகாணத்தில் அமைந்துள்ள பண்ணை ஒன்றிலிருந்த 120 நாய்களை அதிகாரிகள் கருணைக்கொலை செய்துள்ளனர்.

சுவிட்சர்லாந்தில் கருணைக்கொலை செய்யப்பட்ட 120 நாய்கள்: அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள செய்தி | 120 Dogs Euthantized In Canton

அந்த நாய்கள் சரியான உணவின்றி வாடிவந்ததாகவும், நோய்வாய்ப்பட்டிருந்ததாகவும் தெரிவித்துள்ள அதிகாரிகள், ஆகவே, வேறு வழியின்றி அவைகளைக் கருணைக்கொலை செய்ய நேர்ந்ததாகவும் தெரிவித்துள்ளார்கள். ஆனால், அவற்றில் பல நாய்களைக் காப்பாற்றியிருக்கமுடியும் என்று கூறும் விலங்குகள் நல ஆர்வலர்கள், அவைகளைக் கொல்லும் முடிவு அவசரமாக எடுக்கப்பட்டுள்ளதாகக் குற்றம் சாட்டியுள்ளனர்.