திருகோணமலை முத்துநகர் பகுதியில் பிறந்து 42 நாட்களான சிசு உயிரிழந்தமை தொடர்பில் சீனக்குடா பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
இச்சம்பவம் இன்று (11) முத்துநகர் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
சிசு பிறந்து 42 நாட்கள் எனவும் இரவு சிசுவுக்கு பால் கொடுத்துவிட்டு படுக்கை அறையில் உறங்கிக் கொண்டு இருந்த தாய் இன்று அதிகாலை சிசுவை பார்த்த போது உயிரிழந்த நிலையில் குழந்தை இருந்ததாக பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணையின் மூலம் தெரிய வந்துள்ளது.
ஆனாலும் உயிரிழந்த சிசுவை நல்லடக்கம் செய்ய முற்பட்டபோது சீனக்குடா பொலிஸார் சிசுவின் சடலத்தை திருகோணமலை பொது வைத்திய சாலையின் சட்ட வைத்திய நிபுணரின் அறிக்கைக்காக ஒப்படைத்துள்ளதாக அறியமுடிகின்றது.
சிசுவின் சடலத்தை எதிர்வரும் 13 ஆம் திகதி எக்கோ பரிசோதனைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு கொண்டு வருமாறு மருத்துவர்கள் தமக்கு கூறியிருந்தாக பெற்றோர்கள் பொலிஸாரிடம் கூறியுள்ளனர்.
இருந்த போதிலும் சிசுவின் மரணம் தொடர்பில் விசாரணைகளை தாம் முன்னெடுத்து வருவதாக சீனக்குடா பொலிஸார் தெரிவித்தனர்.

