வசாவிளானில் தனியார் காணியில் அமைக்கப்படும் இராணுவ வைத்தியசாலைக்கு எதிராக சட்ட நடவடிக்கை

52 0

வசாவிளானில் தனியார் காணியில்  இராணுவ வைத்தியசாலை அமைக்கப்பட்டு வரும் நிலையில் காணி உரிமையாளரின் கோரிக்கையை அடுத்து  ஜனாதிபதி சட்டத்தரணி சுமந்திரன், தமிழரசுக் கட்சியின் தலைவர் சிவிகே சிவஞானம் மற்றும் வலி வடக்கு தவிசாளர் சுகிர்தன் ஆகியோர் களத்திற்குச் சென்று காணி உரிமையாளருடன் செவ்வாய்க்கிழமை (21) மாலை 6.00 மணியளவில்  கலந்துரையாடினர்.

தனியார் காணி உரிமையாளருடன் கலந்துரையாடிய ஜனாதிபதி சட்டத்தரணி குறித்த இராணுவ வைத்தியசாலை கட்டடத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கையை மிக விரைவில் மேற்கொள்ளவுள்ளதாக  உறுதியளித்தார்.