மக்களின் சுகாதாரத்தை மேம்படுத்துவதற்கான திட்டத்தில் தலைமைத்துவம், நிபுணத்துவம் மற்றும் அறிவு அவசியம்

42 0

“இணைந்திருங்கள். நலமாக இருங்கள்” என்ற தேசிய திட்டம் தொடங்கப்படுகிறது. இலங்கை சமூக மருத்துவர்கள் கல்லூரி எதிர்கால  சுகாதார சவால்களை சமாளிப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் என்று சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ  தெரிவித்தார்.

இலங்கை சமூக மருத்துவர்கள் கல்லூரி (CCPSL), வாழ்க்கையின் அனைத்து நிலைகளிலும் ஒட்டுமொத்த நல்வாழ்வை மேம்படுத்துவதற்காக “இணைந்திருங்கள். நலமாக இருங்கள்” என்ற தலைப்பில் ஒரு தேசிய பிரச்சாரத்தை வெள்ளிக்கிழமை  (17) கொழும்பு கலதாரி ஹோட்டலில் சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர்  நளிந்த ஜெயதிஸ்ஸ தலைமையில் நடைபெற்றது.

இது குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை உடல், மன, சமூக மற்றும் ஆன்மீக நல்வாழ்வை நோக்கிச் செயல்படும் ஒரு திட்டமாகும். இந்த பிரச்சாரம் மக்கள் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை வாழவும், தங்களுடன், தங்கள் குடும்பங்களுடன், தங்கள் நண்பர்களுடன், தங்கள் சமூகத்துடன் மற்றும் சுற்றுச்சூழலுடன் உறவுகளை வளர்த்துக் கொள்ளவும் சிறந்த வாய்ப்பை வழங்குகிறது.

இந்தத் திட்டம் மக்கள் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை வாழவும், குடும்பத்தினர், நண்பர்கள், சமூகம் மற்றும் சுற்றுச்சூழலுடன் உறவுகளை வளர்த்துக் கொள்ளவும், சமூக நடவடிக்கைகளில் முழு ஆர்வத்துடன் பங்கேற்க வாய்ப்புகளை வழங்குகிறது. இந்த தேசிய திட்டத்தின் மூலம் சுகாதாரம் மற்றும் நல்வாழ்வை நோக்கிச் செயல்படுவதற்கான தனது உறுதியான நிலைப்பாட்டை  வெளி உலகுக்கு   வெளிகாட்டுகிறது.

இந்த நிகழ்வின் போது அமைச்சர் கருத்து தெரிவிக்கையில்,

இலங்கை சமூக மருத்துவக் கல்லூரியின் 31வது தலைவராக நியமிக்கப்பட்ட விந்தியா குமாரபெல்லிக்கு எனது வாழ்த்து. மேலும் அவரது தலைமையின் கீழ், கல்லூரி தொடர்ந்து வளர்ந்து நாட்டின் பொது சுகாதாரத்திற்கு நீடித்த பங்களிப்பை வழங்கும்.

இலங்கை சமூக மருத்துவக் கல்லூரியின் அனைத்து உறுப்பினர்களும் நாட்டில் சுகாதார சேவையை மேம்படுத்துவதில் உறுதியாக உள்ளனர்.

மேலும், தாய் மற்றும் குழந்தை சுகாதாரம், நோய்த்தடுப்பு மற்றும் நோய் கட்டுப்பாடு போன்ற துறைகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைவதற்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் செய்கிறார்கள்.

நாட்டின் சுகாதாரப் பணியாளர்கள் உலகிற்கு ஒரு முன்மாதிரியாகத் திகழ்வதாகவும், குழுப்பணி மற்றும் சமூகத் தேவைகள் பற்றிய ஆழமான புரிதலுடன் சமூகத்திற்கு சேவை செய்ய முடியும் என்பதைக் நிருபித்து உள்ளனர்.

நமது தேசிய வளர்ச்சி இலக்குகளில் சுகாதாரத் துறை மையமானது , அது ஒரு சேவை மட்டுமல்ல, சமூக மற்றும் பொருளாதார முன்னேற்றத்திற்கான அடித்தளமும் கூட, சுகாதாரத் துறை யானது நோய் தடுப்பின் மூலம் ஆரோக்கியமான சமூகங்களை உருவாக்குவதற்கும் சுகாதார வல்லுநர்கள் உறுதிபூண்டுள்ளனர்.

சமூக மருத்துவர்கள் கல்லூரி அந்தத் திட்டத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது, மக்களின் சுகாதாரத்தை மேம்படுத்துவதற்கான திட்டத்தில் தலைமைத்துவம், நிபுணத்துவம் மற்றும் அறிவு அவசியம், இந்த நடவடிக்கைகள் சமூக மருத்துவர்கள் கல்லூரியால் நிறைவேற்றப்படுகின்றன.

எதிர்கால  சுகாதார சவால்களை சமாளிக்க உத்திகள் மற்றும் விரிவான புரிதல் தேவை, சமூக மருத்துவர்கள் கல்லூரி அதில் முக்கிய பங்கு வகிக்கிறது, நோய் தடுப்பு மற்றும் பயிற்சி ஆகியவற்றில் நிபுணத்துவம் அடிப்படையானது என்றார்.

இந்நிகழ்வில் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் பேராசிரியர் கிருஷாந்த அபேசின, முன்னாள் தலைமை தொற்றுநோயியல் நிபுணரும் நாடாளுமன்ற உறுப்பினருமான  நிஹால் அபேசிங்க, முன்னாள் அமைச்சர் சுதர்ஷனி புனாண்டுபுல்லே, இலங்கை சமூக மருத்துவர்கள் கல்லூரியின் முன்னாள் தலைவர் கபில ஜயரத்ன, செயலாளர்  ஏ.எஸ். சந்துஷ்ய பெர்னாண்டோ, இலங்கை சமூக நிபுணர்கள் சங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர்கள் மற்றும் சுகாதார மற்றும் ஊடக அமைச்சின் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.