அதிபர் டிரம்ப் மற்றும் புடின் சந்திப்பு ‘மிகவும் பயனுள்ளதாக’ முடிந்தது

62 0

உக்ரைனில் போரை முடிவுக்குக் கொண்டுவருவது குறித்து மேலும் விவாதிக்க அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் ஆகியோர் ஹங்கேரியில் சந்திக்க உள்ளனர்.

இரு நாடுகளின் தலைவர்களும் வியாழக்கிழமை (16) தொலைபேசி உரையாடலில் ஈடுபட்டதாகவும், இந்த உடன்பாட்டை எட்டியதாகவும் ஜனாதிபதி டிரம்ப் கூறினார்.

அதன்படி, அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ தலைமையிலான உயர்மட்ட ஆலோசகர்கள் குழு அடுத்த வாரம் ரஷ்ய அதிகாரிகளை சந்திக்க உள்ளது, மேலும் இரு அதிபர்களின் சந்திப்பின் திகதி அங்கு முடிவு செய்யப்படும்.

ஹங்கேரியின் தலைநகரம் மற்றும் மிகப்பெரிய நகரமான புடாபெஸ்டில் டிரம்ப்-புடின் சந்திப்பு நடைபெற வாய்ப்புள்ளது.உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி வெள்ளிக்கிழமை (17) வாஷிங்டன், டிசியில் அதிபர் டிரம்புடன் சந்திக்க திட்டமிடப்பட்டுள்ள சூழலில் இந்த தொலைபேசி உரையாடல் முக்கியத்துவம் வாய்ந்ததுள்ளமை குறிப்பிடத்தக்கது.