கல்கிஸ்ஸை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜரான சட்டத்தரணி குணரத்ன வன்னிநாயக்கவை, தலா 500,000 ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் செல்ல அனுமதித்து நீதிமன்றம் உத்தரவிடப்பட்டுள்ளது.
கல்கிஸ்ஸை நீதவான் நீதிமன்ற வளாகத்தில் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரின் கடமைக்கு இடையூறு விளைவித்து அவரை அச்சுறுத்தியதற்காக அவருக்கு எதிரான சட்ட நடவடிக்கைகள் இன்று (15) பிற்பகல் கல்கிஸ்ஸை நீதவான் பசன் அமரசேன முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டபோது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
பொலிஸாரால் கைது செய்யப்படுவதற்காக தேடப்பட்டு வந்த சட்டத்தரணி குணரத்ன வன்னிநாயக்க, இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் ராஜீவ் அமரசூரியவுடன் இன்று கல்கிஸ்ஸை நீதவான் நீதிமன்றத்திற்கு வந்ததை அடுத்து இந்த நீதிமன்ற நடவடிக்கை இடம்பெற்றது.

