உலகின் முதல் செங்குத்தாக மிதக்கும் சூரிய சக்தி நிலையத்தை ஜேர்மனி அறிமுகப்படுத்தியுள்ளது.
ஜேர்மனியின் பவேரியா மாநிலத்தில் உள்ள Starnberg மாவட்டத்தில், SINN Power நிறுவனம் உலகின் முதல் செங்குத்தாக மிதக்கும் சூரிய சக்தி நிலையத்தை (Vertical Floating Solar Power Plant) வெற்றிகரமாக நிறுவியுள்ளது.
Jais gravel pit ஏரியில் அமைக்கப்பட்டுள்ள இந்த திட்டம், உள்ளூர் மற்றும் உலகளாவிய புதுப்பிக்கத்தக்க ஆற்றல் வளர்ச்சியில் புதிய பரிமாணத்தை உருவாக்கியுள்ளது.
1.87 மெகாவாட் திறன் கொண்ட இந்த மிதக்கும் சோலார் திட்டம், ஆண்டுக்கு சுமார் 2 GWh மின்சாரம் உற்பத்தி செய்யும் திறன் கொண்டது.
ஏரியின் வெறும் 4.65 சதவீத பகுதியை மட்டுமே பயன்படுத்தி, 60 சதவீதம் வரை மின் பயன்பாட்டை குறைத்துள்ளது. எதிர்காலத்தில் இது 70 சதவீதம் வரை உயரும் என SINN Power தெரிவித்துள்ளது.
இந்த SKipp எனப்படும் புதிய தொழில்நுட்பத்தில், கிழக்கு-மேற்கு திசையில் செங்குத்தாக சோலார் பேனல்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இது காலை மற்றும் மாலை நேரங்களில் கூடுதல் மின்சாரம் உற்பத்திக்கு உதவுகிறது.
1.6 மீட்டர் ஆழத்தில் நீருக்கடியில் அமைக்கப்பட்ட கீல் போன்ற அமைப்பு, காற்று மற்றும் நீர்மட்ட உயர்வுகளுக்கு ஏற்ப சீரான இயக்கத்தை வழங்குகிறது.
இந்த திட்டம் ஜேர்மனியின் நீர்வள சட்டத்திற்கேற்ப வடிவமைக்கப்பட்டுள்ளது. சுற்றுச்சூழல் ஆய்வுகளின்படி, இது நீர்த் தரத்தை மேம்படுத்துவதுடன், பறவைகள் மற்றும் மீன்களுக்கு புதிய வாழ்விடங்களையும் உருவாக்கியுள்ளது.
இத்திட்டம் கடல்சார் பயன்பாட்டிற்கும் விரிவாக்கத்திற்கும் தயாராக உள்ளது.

