மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மவுசாகலை நீர்தேக்கத்தின் மஸ்கெலியா பொலிஸ் நிலையத்திற்கு கீழ் பகுதி கரையில் இருந்து இளைஞர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
குறித்த இளைஞர் மஸ்கெலியா பிரவுன்லோ தோட்டத்தை சேர்ந்த 32 வயது மதிக்கத்தக்க சமில என்ற இளைஞர் என அடையாளம் காணப்பட்டுள்ளாக மஸ்கெலியா பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த இளைஞர் மஸ்கெலியா நகரில் கூலி முச்சக்கர வண்டி செலுத்துவதை தொழிலாக கொண்டுள்ளதுடன் நேற்று இரவு வேலையில் தனது வீட்டின் அருகில் நீர்தேக்கத்தில் மீன்பிடிக்கும் வலை இடுவதற்காக சென்ற வேலையில் இச்சம்பவம் நடந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
குறித்த நபரின் பாதனி, டவல், ஜேர்ஷி என்பன கரையில் கண்டெடுக்கப்பட்டுள்ளதுடன் இளைஞரின் கைகளில் மீன் பிடிக்கும் வலை சிக்கி இருந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
சடலம் இன்னும் நீர்த்தேக்கத்தில் இருந்து கரைக்கு எடுக்கப்படவில்லை என்பதுடன் SOCO பொலிஸ், திடீர் மரண விசாரணை அதிகாரி ஆகியோர் வந்தவுடன் மேலதிக விசாரனைகளை முன்னெடுக்க உள்ளதாக மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சுகத் புஸ்பகுமார தெரிவித்தார்.

