திருகோணமலையில் “கிழக்கின் சிறகுகள் 2025” இலக்கிய விழா ஆரம்பம்

50 0

கிழக்கு மாகாண கலாசார திணைக்களம், இலக்கிய மாதத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்த “கிழக்கின் சிறகுகள் 2025” மூன்று நாள் இலக்கிய நிகழ்ச்சியின் இரண்டாம் நாள் நிகழ்வு, வியாழக்கிழமை (09) திருகோணமலை ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக்கல்லூரி மைதானத்தில், கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்த லால் ரத்னசேகரவால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள புத்தகக் கண்காட்சி, கலாச்சார ரீதியான மதிப்புமிக்க கலைப்பொருட்களின் கண்காட்சி, பாரம்பரிய உணவுக் கடைகள் மற்றும் கலாச்சார நிகழ்ச்சிகள் வெள்ளிக்கிழமை (10) ஆரம்பமாகி சனிக்கிழமை (12) வரை நடைபெறவுள்ளது.

நேற்றைய ஆரம்ப நிகழ்வில் மாகாண பிரதம செயலாளர், மாகாண கல்வி, கலாசார, விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளர் உட்பட மாகாண அமைச்சுகளின் செயலாளர்கள், மாகாண கலாசாரத் திணைக்களத்தின் பணிப்பாளர், மற்றும் திணைக்கள தலைவர்கள் ஆகியோர் பங்குபற்றினர்.

பரம்பரை எழுத்தாளர் உதவித் திட்டத்தின் கீழ் எழுத்தாளர்களிடம் இருந்து பெறப்பட்ட மொத்தம் 46 புத்தகங்கள், அதே திட்டத்தின் கீழ் கலாச்சாரத் திணைக்களத்தால் அச்சிடப்பட்டு வெளியிடப்பட்ட 47 கையெழுத்துப் பிரதிகள், மற்றும் பல்வேறு பதிப்பகங்களிலிருந்து பெறப்பட்ட புத்தகங்களும் இங்கு நடைபெறும் புத்தக கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.