நீர்கொழும்பு விஜயரத்தினம் இந்து மத்திய கல்லூரியின் 70வது ஆண்டு விழா நடைபவனி

45 0

நீர்கொழும்பு விஜயரத்தினம் இந்து மத்திய கல்லூரி தனது 70 ஆவது பவள விழாவை முன்னிட்டு நடத்திய வீதி நடைபவனி (Road Parade) கடந்த  திங்கட்கிழமை (06)  இடம்பெற்றது.

இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நடைபவனி கல்லூரிஅதிபர் நா. புவனேஸ்வராஜா தலைமையில் நடைபெற்றது.

இந்த நிகழ்வின் உச்சகட்டமாக, கல்லூரியின் விசேட கொடியை ஏந்திய வண்ணம் ஹெலிகாப்டர் ஒன்று சாகசப் பரப்பை மேற்கொண்டது.

பிரதம விருந்தினராக கல்லூரியின் ஸ்தாபக குடும்பத்தைச் சேர்ந்த யோகேஸ்வரி ஜெயம் விஜயரட்ணம் அம்மா, விசேட விருந்தினராக பழைய மாணவர் மன்றத்தின் காப்பாளர் பாரத்குமார் ஆகியோர் கலந்துகொண்டனர்.

நிகழ்வில் பழைய மாணவர்கள், பெற்றோர், தற்போதைய மாணவர்கள், ஆசிரியர்கள், அதிபர் மற்றும் நலன் விரும்பிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.