கைகளில் அதிகாரம் இருக்க வேண்டும் அதுவே எமது அரசாங்கத்தின் விருப்பம் ; க. இளங்குமரன்

56 0

எமது நாட்டை மூன்று ஆண்டுகளுக்குள் போதைப் பொருளற்ற நாடாக  உருவாக்க வேண்டும் என்பது  எங்கள் எல்லோரது இலக்கும் என்று பாராளுமன்ற உறுப்பினர் க. இளங்குமரன் தெரிவித்துள்ளார்.

உலக குடியிப்பாளர் தினத்தை யொட்டி இன்று தேசிய வீடமைப்பு அதிகார சபையினால் கிளிநொச்சி மாவட்டத்தின்  கரைச்சி பச்சிலை பள்ளி பூ நகரி கண்டாவளை ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளில்  தலா  10 லட்சம் ரூபா செலவில் பயனாளிகளின் பங்களிப்புடன்  அமைக்கப்பட்ட 11 வீடுகள் அதன்  பயனாளிகளிடம் வழங்கி வைக்கும் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை (05) நடைபெற்றது

இந்த நிகழ்விலே கலந்து கொண்டு உரையாற்றுகையில்,

ஏற்கனவே ஒரு கருப்பு அரசு இந்த நாட்டில்  இருக்கின்றது. அதன் பின்னால் போதைப்பொருள் வியாபாரிகளும் ஊழல்வாதிகளும் ஒழித்து இருக்கின்றார்கள்.

இப்பொழுது போதைப்பொருளை கட்டுப்படுத்துகின்ற வேலைகள் முன்னெடுக்கப்படுகின்றன என்று குறிப்பிட்ட அவர் அண்மையிலே ஜப்பானுக்கு சென்ற ஜனாதிபதி   வடக்கு கிழக்கிலே 100 பாடசாலைகளை அபிவிருத்தி செய்வதற்கு நடவடிக்கையை மேற்கொண்டிருக்கின்றார் .

அரசியல்வாதிகளிடம் அதிகாரம் இருப்பதைவிட மக்களின் கைகளில் அதிகாரம் இருக்க வேண்டும் அதுவே எமது அரசாங்கத்தின் விருப்பம் .

இந்த அரசாங்கத்தால் பாராளுமன்ற ஓய்வூதியம் நிறுத்தப்படுகின்றது அதாவது மக்களால் நிராகரிக்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு மக்களின் வரிப்பணத்தில் இருந்து ஓய்வூதியம் வழங்கப்படுகிறது

இது  நிறுத்தப்படுகின்றது அத்துடன் மூன்று ஆண்டுகளில் போதைப் பொருள் அற்ற ஒரு பிரதேசமாக மாற்றுவதற்கு  வேலைத்திட்டத்தை இப்பொழுது முன்னெடுத்திருக்கின்றோம் குறிப்பாக இங்கிருந்து வெளிநாடுகளுக்கு வேலை தேடி இளைஞர் யுவதிகள் செல்லுகின்றார்கள்.

போதைப் பொருளைக் கட்டுப்படுத்தி எமது நாட்டிலேயே தொழிற்சாலைகளை உருவாக்குகின்ற போது வெளிநாடுகளிலிருந்து இங்கு வேலை வாய்ப்புகளை தேடி வருகின்ற ஒரு நிலைமை உருவாக்கப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

குறித்த  வீடுகள் கையளிக்கின்ற நிகழ்விலே தேசிய மக்கள் சக்தியின் கிளிநொச்சி மாவட்ட அமைப்பாளர் மருங்கன் மோகன்  தேசிய வீடமைப்பு அதிகார சபையின் மாவட்ட உத்தியோகத்தர்கள் பிரதேச  செயலகங்களினுடைய பதவி நிலை உத்தியோகத்தர்கள் பிரதேச சபை உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.