கடல்சார் பாதுகாப்பு நிறுவனங்களுக்கு ஆதரவு வழங்குவதற்கான ஒப்பந்தத்தில் இலங்கை கடற்படை கையெழுத்து

37 0

இரண்டு வெளிநாட்டு தனியார் கடல்சார் பாதுகாப்பு நிறுவனங்களின் உள்ளூர் பிரதிநிதியுடன் ஒப்பந்தத்தம“ ஒன்றில் இலங்கை கடற்படை கையெழுத்திட்டுள்ளது.

இந்த ஒப்பந்தம், கொழும்பில் உள்ள கடற்படைத் தலைமையகத்தில் ஒக்டோபர் 3ஆம் திகதி கைச்சாத்திடப்பட்டதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.

அதற்கமைய, கடற்படை மேற்பார்வை மற்றும் பாதுகாப்பின் கீழ் துப்பாக்கிகள், வெடிமருந்துகள் மற்றும் தொடர்புடைய உபகரணங்களை சேமித்து கொண்டு செல்வதற்கும், அந்தந்த உள்ளூர் பிரதிநிதிகளால் வழங்கப்படும் ஆதரவுடன் அதனை வழங்குவதற்கும் உதவுவதாக ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தேசிய நலன்களைப் பாதுகாப்பதன் அவசியத்தை அங்கீகரித்து, ஒகஸ்ட் 13ஆம் திகதி  2449/27ஆம் இலக்க வர்த்தமானியின் மூலம், கடல்சார் பாதுகாப்பு நடவடிக்கைகளை சுயாதீனமாக மேற்கொள்ள இலங்கை கடற்படைக்கு அதிகாரத்தை ஜனாதிபதி வழங்கியுள்ளார்.

இந்த விடயம் பாராளுமன்றத்திற்கும் முறையாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், இந்தத் திட்டத்தின் மூலம் கிடைக்கும் அனைத்து வருமானமும் முழுமையாக அரசாங்க ஒருங்கிணைந்த நிதிக்கு வரவு வைக்கப்படும்.

மேலும், பாதுகாப்பு அமைச்சின் மேற்பார்வையின் கீழ், கடல்சார் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான அதன் அதிகாரத்தைப் பயன்படுத்துவதற்கும், அதன் ஆணையை நிறைவேற்றுவதற்கும் இலங்கை கடற்படை அர்ப்பணிப்புடன் செயற்படுவதாகவும் அறிக்கையொன்றினூடாக தெரிவித்துள்ளது.