ஹொரணையில் விபத்தில் சிக்கி இளைஞனும் யுவதியும் பலி!

59 0

ஹொரணை – மொரகஹஹேன வீதியில் கதன்வில விகாரைக்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் இளைஞனும் யுவதியும் உயிரிழந்துள்ளதாக ஹொரணை பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்து இன்று சனிக்கிழமை (04) பிற்பகல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மோட்டார் சைக்கிளும் லொறியும் ஒன்றுடன் ஒன்று மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தின் போது முமோட்டார்  சைக்கிளில் பயணித்த  இளைஞனும் யுவதியும் காயமடைந்துள்ள  நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் இருவரும் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர்கள் மொரகஹஹேன பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய யுவதியும் 24 வயதுடைய இளைஞனும் ஆவர்.

இந்த விபத்து தொடர்பில் ஹொரணை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.