ஜேர்மன் விமான நிலையம் ஒன்றிலும் மர்ம ட்ரோன்கள்

73 0

டென்மார்க் மற்றும் நோர்வே நாடுகளின் விமான நிலையங்கள் மீது மர்ம ட்ரோன்கள் பறந்ததைப் போல, ஜேர்மனியின் மியூனிக் நகரிலுள்ள விமான நிலையத்தைச் சுற்றிலும் ட்ரோன்கள் பறந்ததால் நேற்று மாலை விமான நிலையம் மூடப்பட்டது.

ஆயிரக்கணக்கான பயணிகள் பாதிப்பு

விமான நிலையம் மூடப்பட்டதால் சுமார் 3,000 பயணிகள் பாதிப்புக்குள்ளானார்கள். 17 விமானங்களின் புறப்பாடு ரத்து செய்யப்பட்டதுடன், மியூனிக் நோக்கி வந்த 15 விமானங்கள் வேறு விமான நிலையங்களுக்குத் திருப்பி அனுப்பப்பட்டன. பாதிக்கப்பட்ட பயணிகள் தங்க இடமும், போர்வைகள், பானங்கள் மற்றும் சிற்றுண்டியும் வழங்கப்பட்டதாக மியூனிக் விமான நிலையம் வெளியிட்ட அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது.

ஜேர்மன் விமான நிலையம் ஒன்றிலும் மர்ம ட்ரோன்கள்: சமீபத்திய தகவல் | Munich Airport Reopens After Wave Of Drones Sight

ட்ரோன்களை அடையாளம் காண ஹெலிகொப்டர்கள் உதவியுடன் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டும் பயனொன்றும் இல்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், இன்று அதிகாலை விமான நிலையம் மீண்டும் திறக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ட்ரோன்கள் காணப்பட்ட விடயம் தொடர்பில் உள்ளூர் மற்றும் தேசிய அளவில் விசாரணைகள் துவக்கப்பட்டுள்ளன.