புத்தளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புத்தளம் – ஒக்கம்பிட்டிய பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்து நேற்று வெள்ளிக்கிழமை (03) இடம்பெற்றுள்ளது.
ஒக்கம்பிட்டியவிலிருந்து புத்தளம் நோக்கிச் சென்ற மோட்டார் சைக்கிள், கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி ஒரு பாறையில் மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.
இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளின் செலுத்துனரும் பின்புறத்தில் பயணித்த ஒருவரும் பலத்த காயமடைந்து புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
இதன்போது, மோட்டார் சைக்கிளின் செலுத்துனர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
மஹகொடையாயவைச் சேர்ந்த 20 வயதுடைய இளைஞனே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.
பிரேத பரிசோதனைகளுக்குப் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
மற்றையநபர், மேலதிக சிகிச்சைகளுக்காக மொனராகலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
புத்தளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

