வெளிநாட்டு தொழில் ஒப்பந்தங்களை மீள செயற்படுத்துவதற்கு பல திருத்தங்களை மேற்கொள்ள நடவடிக்கை

47 0

கைத்தொழில் மற்றும் சேவை வழங்கும் தொழில் எனும் வீட்டு வேலை அல்லாத தொழில்களுக்கு புலம்பெயர் தொழிலாளர்கள் சுயவழியில் (முகவர் நிறுவனங்கள் ஊடாக அல்லாமல்) பணியகத்தில் பதிவு செய்யும்போது, குறித்த சேவை ஒப்பந்தம் தூதரக காரியாலயம் ஊடாக மீள் செயற்படுத்தும்போது அறவிடும் கட்டணம் திருத்தப்பட்டுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் அறிவித்துள்ளது.

அதன் பிரகாரம் கடந்த ஜூலை மாதம் 1ஆம் திகதி முதல் செயற்படுத்தப்பட்ட ஆலாேசனைகளுக்கு அமைய, அதில் பல திருத்தங்கள் உடனடியாக செயற்படுத்தும் வகையில் திருத்தப்படுள்ளதாகவும் பணியகம் அறிவித்துள்ளது.

அதன் பிரகாரம் ஒரே சேவை வழங்குனரிடம் 3மாத காலத்துக்குள் 5 சேவை ஒப்பந்தங்கள் மாத்திரம் மீள் செயற்படுத்துமாறு வரையறுத்து, வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக இணைத்துக்கொள்ளும் நாடுகளின் தூதரக காரியாலயங்களுக்கு விநியோகிக்கப்பட்டுள்ள ஆலாேசனை பத்திரங்கள் செல்லுபடியற்றதாவதுடன், அதன் பிரகாரம் சுய பதிவு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

ஒரு வெளிநாடு ஒன்றில் பணியாற்றிக்கொண்டு, சுய விருப்பில் வேறு வெளிநாடு ஒன்றில் புதிய தொழில் வழங்குனரின் கீழ் புதிய தொழில் ஒன்றை பெற்றுக்கொள்ளும்போது, பணியத்தின் பதிவை பெற்றுக்கொள்வதற்கு தூதரக காரியாலயத்துக்கு வரும் சந்தர்ப்பங்களில் அதனை புதிய பதிவாக கருதி, பணியகம் பதிவு கட்டணத்தை அறிவிடுகின்றபோது, சேவை ஒப்பந்தத்தை மீள்செயற்படுத்தும் கட்டணத்தில் இருந்து விடுவிப்பதற்கு இந்த திருத்தத்தின் ஊடாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன் தற்போது வெளிநாடுகளுக்கு சென்றுள்ள நபர்களின் வீட்டு வேலை தொழில் அல்லாத தொழில் குழக்களுக்காக தூதரக காரியாலயம் ஊடாக மேற்கொள்ளப்படும் புதிய பதிவுக்காக பணியகம் பதிவுக்கட்டணத்தை அறிவிடுவதுடன் சேவை ஒப்பந்தத்தை மீள செயற்படுத்தும் கட்டணம் அறிவிடுவதில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளது.

வெளிநாடு ஒன்றில் தொழில் செய்துகொண்டு புதிய தொழில் வழங்குனரின் கீழ் சேவை ஒப்பந்தம் மற்றும் விசா அனுமதி பத்திரத்துடன் இந்த நாட்டுக்கு வந்து, மீண்டும் வெளிநாடு செல்லும்போது புதிய பதிவாக கருதி, பணியகம் பதிவுக்கட்டணமாக அறவிடுவதுடன் சேவை ஒப்பந்தத்தை மீள செயற்படுத்தும் கட்டணம் அறவிடுவதில் இருந்து விடுவிப்பதற்கு இந்த திருத்தம் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

எவ்வாறு இருந்தாலும் ஜூலை 1ஆம் திகதியில் இருந்து செயற்படுத்தப்பட்ட, முதல் தடவையாக தொழிலுக்காக சுய வழியில் கைத்தொழில் மற்றும் சேவை வழங்கும் தொழில் எனும் வீட்டு வேலை அல்லாத தொழிலுக்காக வெளிநாட்டுக்கு செல்லும் தொழிலாளர்களின் தொழில் ஒப்பந்தம், குறித்த நாட்டின் தூதரக காரியாலயம் ஊடாக மீள செயற்படுத்தல் மற்றும் கட்டணம் அறிவிடுதல் திருத்தம் இல்லாமல் செயற்படுத்தப்படும் எனவும் பணியம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.