கண்டி – மெனிக்ஹின்ன பகுதியில் துப்பாக்கியுடன் சந்தேக நபர் ஒருவர் மெனிக்ஹின்ன பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
மெனிக்ஹின்ன பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மெனிக்ஹின்ன பகுதியில் உள்ள வீடொன்றில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கைதுசெய்யப்பட்டவர் மெனிக்ஹின்ன பகுதியில் வசிக்கும் முச்சக்கரவண்டி சாரதி ஒருவர் என பொலிஸார் தெரிவித்தனர்.
கைப்பற்றப்பட்ட துப்பாக்கி வெளிநாட்டில் தயாரிக்கப்பட்டது என பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
சந்தேக நபர் அனுமதிப்பத்திரம் இன்றி சட்டவிரோதமாக துப்பாக்கியை வைத்திருந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மெனிக்ஹின்ன பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

