2012 ஆம் ஆண்டு உயிரிழந்ததாக கூறப்படும் ரக்பி வீரரின் மரணத்துடன் என் தந்தைக்கு எந்த தொடர்பும் இல்லை. எனது தந்தைக்காகவே நான் பேசுகிறேன். அரசியல்வாதிக்காகவோ எந்த ஒரு கட்சிக்காகவோ நான் பேச வரவில்லை. குற்றப்புலனாய்வு பிரிவு அதிகாரிகள் காண்பித்த சிசிரிவி காணொளியில் இருந்த நபர் எனது தந்தை என என்னால் கூற முடியாது. அவரது அங்க அடையாளங்களை வைத்து பார்க்கும் போது அது எனது தந்தை அல்ல. எனது தந்தை ஒரு காலமும் மது அருந்தவோ சிகரெட் பிடிக்கவோ மாட்டார். அவரிடம் அவ்வாறான பழக்கம் இல்லை. எனினும் குறித்த காணொளி இருந்த நபர் கையில் மது போதலுடன் இருந்தார் என என பாதாள உலககுழுவை சேர்ந்தவர் என அறியப்படும் அருண ஷாந்த விதானகமகே எனும் “கஜ்ஜாவின் மகன் விதான கமகே இந்துவர அமேஷ மாதேவ தெரிவித்தார்.
மொஹம்மட் வசீம் தாஜுதீனின் கொலை வழக்குடன் மித்தெனியவில் சுட்டு படுகொலை செய்யப்பட்ட அருணவிதான கமகே எனும் “கஜ்ஜாவுக்கு தொடர்பிருந்தமை உறுதி செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு கடந்த செவ்வாய்கிழமை தெரிவித்திருந்தது. இந்நிலையில் இவ்விடயம் தொடர்பில் புதன்கிழமை (1) கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
தொடர்ந்து தெரிவிக்கையில்,
குறித்த ரக்பி வீரர் உயிரிழந்த போது அதாவது 2012 ஆம் ஆண்டு எனது தந்தை ஹொரணை- கொழும்பு 120 பஸ் வீதியில் பேருந்து உதவியாளராக பணிபுரிந்தார். அப்போது எனக்கு மூன்று வயது மாத்திரமே எனினும் எனது உறவினர்கள் எனது தந்தையின் சகோதரர்கள் நண்பர்கள் ஆகியோர் அவர் பேருந்து உதவியாளராக பணியாற்றி இருந்தது எனக்கு தெரிவித்திருந்தனர். அது எனக்கும் நன்றாக தெரிந்த விடயமே. அண்மையில் குற்றப்புலனாய்வு பிரிவு அதிகாரிகள் சிசிடிவி காணொளி ஒன்றை காண்பித்து அதில் இருக்கும் நபர் உங்களது தந்தையா? என கேட்டனர். அதற்கு காணொளியில் இருக்கும் நபர் எனது தந்தை என என்னால் கூற முடியாது.
அவரது அங்க அடையாளங்களை வைத்து பார்க்கும் போது அது எனது தந்தை அல்ல. எனது தந்தை ஒரு காலமும் மது அருந்தவோ சிகரெட் பிடிக்கவோ மாட்டார். அவரிடம் அவ்வாறான பழக்கம் இல்லை. எனினும் குறித்த காணொளி இருந்த நபர் கையில் மது போதலுடன் இருந்தார். தந்தைக்கு முதுகு வலி இருப்பதாக எனது அம்மா அதிகாரிகளிடம் தெரிவித்திருந்தார். எனது தந்தைக்கு முதுகு வலி இருந்தது உண்மைதான் எனினும் 2016 ஆம் ஆண்டு இடம்பெற்ற பேருந்து விபத்து ஒன்றில் சிக்கி காயமடைந்தார். முள்ளந்தண்டு பகுதியில் ஏற்பட்ட தாக்கத்தினால் பின்னர் முதுகு வலி ஏற்பட்டது. சூது, கப்பம் கொருதல் உள்ளிட்ட குற்ற செயல்களில் தந்தை ஈடுபட்டுள்ளார். அவ்வாறு பெரும் பணத்தையும் ஏழை குடும்பங்களுக்கு செலவழித்துள்ளார்.
எவ்வாறாயினும் எனது தந்தை செய்தது தவறு என்பதை நான் ஏற்றுக்கொள்கிறேன். தந்தை உயிரிழந்த போது அம்மா டுபாயில் இருந்தார். அம்மாவுக்கும், தந்தை பணியாற்றி வந்த பேருந்து சாரதிக்கும் இடையில் தகாத உறவு இருந்தது. அது எனக்கும் தெரியும் பின் தந்தைக்கும் தெரியவர பிரச்சனையாக மாறியது. ஒரு நாள் கையும் களவுமாக பிடிபட்ட இருவரையும் தந்தை தாக்கினார். சம்பத் ராமநாயக்க எனும் குறித்த பேருந்து சாரதியை இனிமேல் இந்த ஊரில் இருக்க வேண்டாம். இருந்தால் கொலை செய்வதாக எச்சரித்தார். துப்பாக்கி வைத்திருந்த குற்றச்சாட்டில் எனது தந்தை கைது செய்யப்பட்ட ஐந்தரை மாதங்களாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார். நானே அவரை பிணையில் வெளியே எடுத்தேன்.
எனினும் பொலிஸார் கூறியது போல எனது தந்தையிடமிருந்து துப்பாக்கி அல்ல 4 “வாக்கிடாக்கிகள்” மாத்திரமே கைப்பற்றப்பட்டன. இதற்கிடையில் தந்தையின் காணி ஒன்றை விற்று அதில் கிடைத்த பணத்தை கொண்டு அம்மா வெளிநாட்டுக்குச் சென்றார். விளக்கமறியலில் இருந்து வெளியே வந்த தந்தை பின்னர் அம்மாவை தேடினார். அதன் பின்னரே அவர் தனது இரண்டாவது கணவருடன் டுபாயில் இருப்பது தெரியவந்தது. தந்தையின் முன்விரோதியான ஜே.சி.பி . சமன் (பெக்கோ சமான்) என்பவரும் அதன் பின்னர் தந்தையுடன் பேச ஆரம்பித்தார். ஏதேனும் உள்நோக்கத்திற்காக பேச ஆரம்பித்தாரா என்பது எனக்கு தெரியாது. சம்பத் ராமநாயக்க சாரதியாக இந்த பஸ்ஸின் உரிமையாளரே ஜே.சி.பி சமன் .
தந்தை உயிரிழந்தமை தொடர்பில் அம்மாவுக்கு தெரியப்படுத்தினோம் எனினும் தங்கை மற்றும் தம்பி ஆகியோர் உயிரிழந்த விடயத்தை அவரிடம் தெரிவிக்கவில்லை. அன்றைய தினமே அம்மா வெளிநாட்டில் இருந்து நாட்டிற்கு வந்திருந்தார். தந்தை இறந்து இரண்டு அல்லது மூன்று மணித்தியாலங்களுக்குள் ஜே.சி.பி . சமன் எனும் குறித்த நபர் சுமார் இரண்டரை இலட்சம் ரூபா பணத்தை அம்மாவின் வங்கி கணக்கில் வைப்பிட்டார். அதன் பின்னர் என்னை தொடர்பு கொண்டு அவ்விடயத்தை தெரிவித்திருந்தார். அம்மாவிடம் இதை கேட்ட போது அவரை இல்லை என அதற்கு மறுப்பு தெரிவித்தார். பின்னரே அதை ஏற்றுக்கொண்டார். எவராயினும் எனது தந்தையின் மரணத்துடன் எனது தாய்க்கும் ஜே.சி.பி சமன் என குறிப்பிடப்படும் நபருக்கும் தொடர்புள்ளது.
பல வருடங்களாக தந்தையுடன் முரண்பட்டு கொண்டிருந்த நபர் திடீரென அவருடன் பழக ஆரம்பித்தது எப்படி? என தாயிடம் கேட்டபோது அவர் தனக்கு அதைப் பற்றி தெரியாது . எனது முதல் கனவனையும் பிள்ளைகளையும் கொலை செய்ய வேண்டிய எந்த அவசியமும் எனக்கு இல்லை என்றார். தந்தை இறந்து தற்போது 7 மாதங்கள் கடந்து விட்டன. தாய் மற்றும் தந்தையின் குடும்பத்தினரே எனக்கான செலவுகள் அனைத்தையும் கவனித்துக் கொள்கிறார்கள். தாய் என்னை பராமரிப்பதோ என்னுடன் பேசுவதோ இல்லை. குற்றப்புலனாய்வு பிரிவில் காணொளியை காண்பித்து விசாரணை நடத்திய போது நானும் அங்கிருந்தேன். இருவரிடமும் வெவ்வேறாக விசாரணை செய்தனர். ஆரம்பத்தில் அது தந்தை அல்ல என மறுத்த அவர் தனி அறையில் வைத்து விசாரணை நடத்தியதன் பின்னர் அது தந்தை எனக் குறிப்பிட்டுள்ளார்.
அவர்கள் உள்ள என்ன பேசிக் கொண்டார்கள் என்பது எனக்கு தெரியாது. தந்தையின் மரணத்தின் போது வீட்டிற்கு வந்திருந்த அம்மா எனக்கு தேவையானவரை அல்ல விட்டு வைத்துள்ளீர்கள் இவனை எப்படி நான் பார்த்துக்கொள்வது என தொலைபேசியில் உரையாடியுள்ளார். இதை அங்கிருந்த எனது உறவினர்களும் நன்கு அறிவார்கள். எனது தாய்க்கு என்னையும் எனது தந்தையையும் கொலை செய்ய வேண்டும் என்றே திட்டமிருந்தது. அவரின் உறவுக்கு நாங்கள் இருவருமே தடையாக இருந்தோம் ஆகையால் எம்மை இல்லாமல் ஆக்கவே எண்ணினார். தந்தையின் மரணத்திற்கு நீதி வேண்டும். அவர் மீது பொய்யான குற்றச்சாட்டுகளை சுமத்த வேண்டாம். தந்தையின் மரணத்துக்கு காரணமான எனது அம்மாவையும் சமன் ரத்நாயக்க எனும் நபரையும் கைது செய்து விசாரணை மேற்கொள்ளுமாறு பொலிஸாரிடம் கோரிக்கை விடுக்கிறேன். மனித படுகொலை போன்ற பாரிய குற்றச்செயலில் எனது தந்தை ஈடுபடவில்லை என்பதை என்னால் உறுதியாக கூற முடியும் என்றார்.

