மூதூரில் இருந்து திங்கட்கிழமை (29) கடலுக்குச் சென்ற இயந்திரப் படகு மீண்டும் கரை திரும்பியபோது விபத்துக்குள்ளானது. இதில் பயணித்த இருவரில் ஒருவர் உயிருடன் மீட்கப்பட்ட நிலையில், மற்றையவர் காணாமல் போயிருந்தார்.
காணாமல் போனவரைத் தேடும் பணி புதன்கிழமை (01) வரை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்த தேடுதல் நடவடிக்கையில் 50க்கு மேற்பட்ட பொதுமக்களின் இயந்திரப் படகுகளும் சம்பூர் பொலிஸாரும் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


