திருட்டு சம்பவத்துடன் தொடர்புடைய பெண்ணை கைதுசெய்ய பொதுமக்களிடம் உதவி கோரல்!

48 0

திருட்டு சம்பவத்துடன் தொடர்புடைய பெண் ஒருவரை கைதுசெய்வதற்கு இறக்குவானை பொலிஸார் பொதுமக்களிடம் உதவி கோரியுள்ளனர்.

இரத்தினபுரியில் இறக்குவானை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பெலவத்த வீதி, கொடகவெல பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் இருந்து  03 இலட்சத்து 64 ஆயிரம் ரூபா பெறுமதியான தங்க நகைகள் மற்றும் பொருட்கள் திருடப்பட்டுள்ளதாக இறக்குவானை பொலிஸ் நிலையத்திற்கு ஆகஸ்ட் 24 ஆம் திகதி முறைப்பாடு ஒன்று கிடைத்துள்ளது.

இந்த வீட்டில் தற்காலிகமக தங்கியிருந்த பெண் ஒருவரே இவ்வாறு திருடியுள்ளதாக என பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

எவ்வாறிருப்பினும் குறித்த பெண் பிரதேசத்தைவிட்டு தப்பிச் சென்று தலைமறைவாக உள்ளதால் பொதுமக்களிடம் உதவி கோரி பொலிஸார், சந்தேக நபரின் புகைப்படத்தை தற்போது வெளியிட்டுள்ளனர்.

இந்த புகைப்படங்களில் உள்ள சந்தேக நபர் தொடர்பில் ஏதேனும் தகவல்கள் கிடைத்தால் இறக்குவானை பொலிஸ் நிலையத்தின் 071 – 8591394 அல்லது 071 – 8593808 என்ற தொலைபேசி இலக்கங்களுக்கு தொடர்பு கொள்ளுமாறு பொலிஸார் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.