பிரான்ஸில் தென்னாப்பிரிக்க தூதர் மர்ம மரணம்: அதிகாரிகள் விசாரணை

49 0

தென்னாப்பிரிக்க தூதர் பிரான்ஸில் மர்மமான முறையில் உயிரிழந்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

செவ்வாய்க்கிழமை பாரிஸில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தென்னாப்பிரிக்க நாட்டின் முன்னாள் அமைச்சரும் பிரான்ஸ் நாட்டிற்கான தென்னாப்பிரிக்க தூதருமான ந்கோசினாதி இம்மானுவேல் (Nkosinathi Emmanuel Nathi Mthethwa) உயிரிழந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டார்.

பாரிஸில் உள்ள ஹையாட் ஹோட்டலின் 22-வது தளத்தில் உள்ள அறையில் அவரது உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தை பிரான்ஸ் விசாரணை அதிகாரிகள் தன்னை தானே மாய்த்துக் கொண்ட சம்பவமாக கருதி விசாரித்து வருகின்றனர்.

இந்நிலையில் வழக்கறிஞர் லாரே பெக்குவா அளித்த தகவல் படி, தூதரின் மனைவி திங்கட்கிழமை ஒரு காக்டெய்ல் நிகழ்வுக்கு செல்வதற்கு முன்பு அவரை சந்தித்ததாகவும், அதன் பிறகு அன்றிரவு அவரிடம் இருந்து மன்னிப்பு கேட்டு தன் உயிரை மாய்த்துக் கொள்ளும் விருப்பம் தொடர்பான குறுஞ்செய்தி ஒன்று அவருக்கு வந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

பிரான்ஸில் தென்னாப்பிரிக்க தூதர் மர்ம மரணம்: அதிகாரிகள் விசாரணை | South African Ambassador To France Dies In Paris

தூதரின் உயிரிழப்புக்கு தென்னாப்பிரிக்க ஜனாதிபதி சிரில் ரமபோசா இரங்கல் தெரிவித்துள்ளார்.

மேலும் அவரது குடும்பத்தினருடன் உடன் நிற்க வேண்டிய தருணம் என்றும் விவரித்துள்ளார்.