நாட்டை ஐக்கியப்படுத்தும் நோக்கிலே ஐக்கிய தேசிய கட்சியின் ஆண்டு நிறைவு விழாவை அனைவரையும் ஒன்றிணைத்துக்கொண்டு கொண்டாடினோம்.அந்த தொடர்புகளை நாங்கள் தொடர்ந்து முன்னெடுத்துச்செல்ல வேண்டும் என ஐக்கிய தேசிய கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்த்தன தெரிவித்தார்.
காலியில் அமைந்துள்ள ஐக்கிய தேசிய கட்சி காரியாலயத்தில் ஞாயிற்றுக்கிழமை (28) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து குறிப்பிடுகையில்,
அரசியல்வாதிகள் மற்றும் பிரபலங்களின் சொத்துகள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பில் தேடிப்பார்க்கப்போவதாக ஊடகங்களில் செய்தி வெளியிடப்பட்டிருந்தது. அதில் எனது பெயரும் தெவிக்கப்பட்டிருந்தது. எனது சொத்து மற்றும் பொறுப்புக்கள் தொடர்பில் சுமார் 30 வருடங்களுக்கும் அதிக காலம் சமர்ப்பித்திருக்கிறேன். இந்த சொத்து, மற்றும் பொறுப்புக்களை தேடிப்பார்க்கும் இந்த நடவடிக்கைக்கும் அப்பால் சென்று, தேடிப்பார்க்கும் பொறிமுறை ஒன்றை ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதி பதவியில் இருக்கும், அரசாங்கத்தினால் அனுமதிக்கப்பட்ட ஊழல் எதிர்ப்பு சட்டத்தின் ஊடாக சமர்ப்பிக்கப்பட்டிருக்கிறது.
எமது நாடு ஊழல் நிரைந்த நாடு என, எமது சில அரசியல் கட்சிகள் உலகுக்கு காட்டியபோது ரணில் வி்க்ரமசிங்க, 2023ஆம் ஆண்டு 9ஆம் இலக்க ஊழல் எதிர்ப்பு சட்டமூலத்தை 2023 ஆகஸ்ட் மாதம் 8ஆம் திகதி பாராளுமன்றத்துக்கு சமர்ப்பித்து அனுமதித்துக்கொண்டது. விசேடமாக நாட்டு மக்கள் ஒன்றை நினைவில் கொள்ள வேண்டும். இந்த ஊழலை நாட்டுக்குள் கட்டுப்படுத்துவதற்கு தேவையான சட்ட திட்டங்களை அமைத்தது, இந்த நாட்டை இரண்டரை வருடங்கள் ஆட்சி செய்த ரணில் விக்ரமசிவாகும்.
எமது நாட்டுக்குள் ஊழல் இருக்கிறது என்பதால், அதனை கட்டுப்படுத்துவதற்கு தேவையான, ஆசியாவிலே இருக்கும் பலம்வாய்ந்த சட்டம், ஒழுங்கு கட்டமைப்பொன்றை அறிமுகப்படுத்தவே அவர் இதனை கொண்டு வந்தார்.இதன் மூலம் ஏற்படக்கூடிய பிரச்சினைகள் இருக்கின்றன. அதேபோன்று நல்ல விடயங்களும் இருக்கின்றன.இதன் ஊடாக சில சந்தர்ப்பங்களில் அரச இயந்திரம் முகம்கொடுக்கின்ற பிரச்சினைகளும் இருக்கி்ன்றன. இந்த ஊழல் எதிர்ப்பு மாத்திரமல்ல, சுமார் 90 சட்டங்கள்வரை ரணில் விக்ரமசிங்க தனது இரண்டரை வருட காலத்துக்குள் அனுமதித்துக்கொண்டுள்ளார்.
இந்த சட்டங்கள் அனைத்தும் நாட்டு மக்களின் உரிமைகளை பாதுகாக்க செயற்படுத்தியது கடந்த இரண்டரை வருட காலத்திலாகும் என்பதை நாட்டு மக்களுக்கு நினைவுபடுத்த விரும்புகிறேன். அதேபோன்று உலகில் மனிதர்கள் செய்யும் பிரதான விடயம்தான் தவறு. யாரும் பிறந்ததில் இருந்து தவறு செய்கிறார்கள். அதுதான் உலகின் தன்மை. அதனை நிறுத்த முடியாது. கட்டுப்படுத்த மாத்திரமே முடியும்.
ரணில் விக்ரமசிங்கவுக்கு இந்த நாட்டை ஐக்கியப்படுத்தவே தேவையாக இருந்தது. அந்த ஐக்கியப்படுத்தும் நடவடிக்கைகளுக்காகவே ஐக்கிய தேசிய கட்சியின் 79ஆவது ஆண்டு நிறைவுவிழாவின் போது, அனைவரையும் ஒன்றிணைத்துக்கொண்டு கொண்டாடினோம். அந்த தொடர்புகளை நாங்கள் தொடர்ந்து முன்னெடுத்துச்செல்ல வேண்டும் என்றார்.

