ஊழலுக்கு எதிரான போராட்டம், மற்றும் போதைப் பொருட்களுக்கு எதிரான போராட்டம், வன்முறையற்ற நிகழ்வுகளுக்கும் எங்களுடைய ஆதரவுகளை அரசாங்கத்திற்கு வழங்கி வருகின்றோம். என பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இளையதம்பி சிறிநாத் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு கோட்டைகல்லாறு பிறண்சிப் விளையாட்டுக் கழகம் நடாத்திய கலாசார விளையாட்டு விழா கோட்டைக்கல்லாறு பொது விளையாட்டு மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை (28) நடைபெற்றது.
இதன்போது கலாசார விளையாட்டு நிகழ்வுகளும் நடைபெற்றன.
இந்நிகழ்வுக்கு அதிதிகளாக பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இளையதம்பி சிறிநாத், இரா.சாணக்கியன் மற்றும் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபை தவிசாளர் மேகசுந்தரம் வினோராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்.
இதன்போது கலந்து கருத்துத் தெரிவிக்கையிலேயே பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இ.ஸ்ரீநாத் இவ்வாறு குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்…
கோட்டைக்கல்லாறு விளையாட்டு மைதானம் அபிவிருத்தி செய்யப்படல் வேண்டும். இது தொடர்பில் எமது கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களிடமும் தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்களிடமும் கதை;துள்ளேன் அதற்கு அவர்கள் ஒத்திசைவான பதில்களைத் தந்துள்ளார்கள். எதிர்காலத்தில் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றிணைந்து இந்த விளையாட்டு மைதானத்தை அபிவிருத்தி செய்வதற்குரிய நடவடிக்கைகளை விளையாட்டு அமைச்சினூடாகவும் எடுப்போம்.
விளையாட்டுத்துறைகள் எல்லாம் மாகாணசபைகளுடாக அபிவிருத்தி செய்யப்பட வேண்டிய பொறுப்பு இருக்கின்றது. தற்போதைய தேசிய மக்கள் சக்ததி அரசாங்கத்திலே பல செயற்றிட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. ஊழலுக்கு எதிரான போராட்டம், மற்றும் போதைப் பொருட்களுக்கு எதிரான போராட்டம், வன்முறையற்ற நிகழ்வுகளுக்கும் எங்களுடைய ஆதரவுகளை வழங்கி வருகின்றோம்.
எனினும் எமது மாவட்டத்தின் அபிவிருத்தி, அரசியல் தீர்வு, போன்றன போதியளவாக இல்லை. பிடக்கப்பட்டடுள்ள நிலங்கள் முழுமையாக விடுவிப்பதற்குரிய நடவடிக்கைகள் மந்தகதியில் உள்ளன. மாகாணசபைத் தேர்தல் நடாத்தப்படவேண்டும். என அவர் இதன்போது தெரிவித்தார்.

