புத்தளம் – முந்தலம் பகுதியில் நீரில் மூழ்கி ஒருவர் பலி!

43 0

புத்தளம் – முந்தலம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட, பின்கட்டிய வாவியில் மீன்பிடிக்கச் சென்ற ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

பின்கட்டிய ஏரியில் மீன்பிடிக்கச் சென்ற நபர் வீடு திரும்பத் தவறியதாக முந்தலம் பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த முறைப்பாட்டினைத் தொடர்ந்து, குறித்த பகுதியிலுள்ள பிரதேசவாசிகளின் உதவியுடன் அதிகாரிகள் குழு நடத்திய தேடுதலின் போது, சடலம் கண்டுபிடிக்கப்பட்டது.

உயிரிழந்தவர், உடப்புவ பகுதியைச் சேர்ந்த 56 வயதுடையவர் என ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சடலம் சிலாபம் வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. முந்தலம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.