கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி 39 பேர் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இச்சம்பவம் குறித்து அறிந்ததும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கரூருக்கு விரைந்து சென்று பாதிக்கப்பட்டவர்களை சந்தித்தும், உயிரிழந்தவர்களின் குடும்பத்தார்களை சந்தித்தும் ஆறுதல் கூறினார். இதனை தொடர்ந்து கரூருக்கு அமைச்சர்கள், அதிகாரிகள், முன்னாள் அமைச்சர்கள் என பலரும் வந்த வண்ணம் உள்ளனர்.
கரூர் சம்பவம் குறித்து பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், கவிஞரும், பாடலாசிரியருமான வைரமுத்து எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், தாங்க முடியவில்லை;இரவு என்னால்தூங்க முடியவில்லைமரணத்தின் படையெடுப்பால் கரூர் கருப்பூர் ஆகிவிட்டது
அந்த மரணங்களுக்குமுன்னும் பின்னுமானமனிதத் துயரங்கள்கற்பனையில் வந்து வந்துகலங்க வைக்கின்றனபாமரத் தமிழர்களுக்குஇப்படி ஒரு பயங்கரமா?இந்த வகையில்இதுவே கடைசித் துயரமாகஇருக்கட்டும்ஒவ்வோர் உயிருக்கும்என் அஞ்சலிஒவ்வொரு குடும்பத்துக்கும்ஆழ்ந்த இரங்கல்இனி இப்படி நிகழாமல்பார்த்துக் கொள்வதேஇந்த நீண்ட துயரத்துக்குநிரந்தர நிவாரணம்ஆடும் உடம்புஅடங்குவதற்கு நாளாகும்இவ்வாறு வைரமுத்து பதிவிட்டுள்ளார்.

